Saturday, November 24, 2012

4 அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் - சிறப்பு பேட்டி


வணக்கம் தமிழே....
  தமிழ் பதிவுலகில் தனிமுத்திரையுடன் விளங்கிவரும் பதிவுலகின் நட்சத்திர பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் பேட்டி....இவரை பற்றி நா என்ன சொல்ல....
1. நகைச்சுவை

ஜோக் 1 -அஜித், விஜய் வெச்சு ஆமை , முயல் கதை எடுத்தா அஜித் வாக்கிங்க் போயே விஜயை ஜெயிச்சுடுவாரு # கி கி 
ஜோக் 2- நீங்க எப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பீங்க? 
 சம்சாரம் ஊர்ல இல்லாதப்போ 


2. உங்கள் நகைச்சுவைகளுக்கு மிக சிறப்பான விமர்சகர் யார் ? ஏன்?


கிருஷ்ணகிரியை சேர்ந்த வி விஷ்ணுகுமார் , அம்பை தேவா . இருவரும் நீண்ட கால நன்பர்கள் . ஜோக் நல்லாருந்தா நல்லாருக்குன்னும் , மொக்கையா இருந்தா செம மொக்கைன்னும் ஓப்பனா சொல்லிடுவாங்க.. 

3. நீங்கள் எழுதிய முதல் நகைசுவை பற்றி?

சூப்பர் நாவல் எஸ் பி ராமு  நடத்திய சூப்பர் நியூஸ் எனும் மாதம் இரு முறை இதழில் ஜோக் போட்டி வெச்சிருந்தாங்க . அதில் எழுதிய  ஜோக்
 இவ்ளவ் பெரிய மீசை வெச்சிருக்கறவங்க எல்லாம் ஆஃபீஸ் ஹால்ல வெயிட் பண்றாங்களே, எதுக்கு?
 அரசுத்தூதர்க்கான இண்ட்டர்வ்யூ  ( நக்கீரன் கோபால் வீரப்பன் பீரியட்) 


ஆனந்த விகடன்ல வந்த முதல் ஜோக்தான் என்னை பலர்க்கும் அறிமுகம் செஞ்சது
ஜட்ஜ் - மணி பர்சை நீ பிக்பாக்கெட் அடிச்சியா? 

 கேடி - நோ யுவர் ஆனர், மணி பர்சை பாலு எடுத்தான், கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன் 



4. நகைசுவையால் நோயால் உள்ளவரை சிரிக்க வைத்த அனுபவம்?

அந்த அளவுக்கு இன்னும் போகலைங்க.. என் ஜோக்ஸ் படிச்சுட்டு தலைவலி வந்தவங்க , வயித்தால போனவங்க , முகத்துல அடி பட்டவங்க வேணா இருக்காங்க ( விழுந்து விழுந்து சிரிச்சதால ) 

5.தமிழ் இனையத்தில் வளர்கிறதா?


 தமிழ் இணையத்தில் வளருது என்பதை விட தகவல்கள் வளருதுன்னு சொல்லலாம் .இன்னும் நிறைய பேருக்கு தமிழ் ஃபாண்ட் இருப்பதே தெரியாம இருக்கு 



6. சில இடங்களில் இரட்டை அர்த்தம் ஏன்?

டபுள் மீனிங் சங்க காலத்துல இருந்தே இருக்கு . அதையும் ரசிக்கறாங்க. கே பாக்யராஜின் பிரபலத்துக்கு மிக முக்கிய காரணம் பெண்களூம் ரசிக்கும்படி டபுள் மீனிங் காமெடி செஞ்சதால .நான் மிகவும் ரசிச்சது ஆராரோ ஆரிராரோ படத்துல மன நலம் குன்றிய பானுப்ரியாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடும்போது அவர் முதுகுல கிளு கிளுப்பா மெத் தேகம் பட்டதும் தர்ம சங்கடம் ஆகி ( தர்ம சந்தோஷம் !!)  மூட்டையை திருப்பிப்போட்டுக்கறேன்பாரு. ஒரே கிளாப்ஸ். அந்த டைம்ல தான் கதை வசனம் - கே பாக்யராஜ்னு போடுவாரு.
 அந்த அளவுக்கு வர முடியலைன்னாலும் குரு சென்ற பாதையில்.. 
விரைவில் உங்கள் வடிவில் புதிய முந்தானை முடிச்சு எதிர்பார்க்கலாமா ....!

7. புதிய தலைமுறையில் கூறியிருந்திர்கள் ஜோக் பற்றி சிந்திப்பதால் வீட்டில் திட்டு வாங்குகிறேன் என.. அந்த வகையில் வாங்கிய மிக பெரிய பல்பு


சமையல் பண்றப்போ சம்சாரம் காய்கறி நறுக்க சொல்ல கூப்பிட்டா ஜோக் எழுதனும்னு உக்காருவேன். ஜோக் எழுதி அறுக்கறதுக்கு காய்கறி அறுத்தாலாவது யூஸ்ம்பாங்க 
 என் பாப்பா  8 வயசுலயே போஸ்ட் கார்டு எடுத்து வெச்சுக்கிட்டு நானும் அப்பா மாதிரி ஜோக் எழுதறேன் அப்டிங்கும், அப்போ மச்சினி  அதாவது பாப்பாவோட சித்தி “ நீயாவது சிரிப்பு வர்ற மாதிரி ஜோக் எழுது , அப்பா மாதிரி மொக்கை போடாதேம்பாங்க.. 



8. முதல் பதிவு பதிவிட்ட அனுபவம்


முதல் பதிவு  நல்ல நேரம் பிலாக்ல நண்பர் சதீஷ் வழி காட்டுதலில்  ராவணன் பட விமர்சனம் எழுதுனேன். டைட்டில்லயே அட்டர் ஃபிலாப் என் தைரியமாக  கேப்சர் பண்ற மாத்ரீ அவர் பிரமோட் பண்ணாரு. நல்ல ஹிட் ஆச்சு. அப்போதான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது ,  படம் ஃபிளாப் ஆனாலும் நாம எழுதும் பட விமர்சனம் ஹிட் ஆகனும்


9. பதிவுலகில் தாங்கள் பெற்ற முதல் நட்பு

 நல்ல நேரம் கே சதீஷ் குமார் சித்தோடு , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் சென்னை 


10. இனையத்தால் நீங்கள் பெற்ற நன்மைகள் தீமைகள் என்ன?


 நன்மை  - உலகம் பூரா பலரது அறிமுகம் , பாராட்டுக்கள் வாழ்த்துகள். ஒரு கல்யாணத்துக்கோ ஆஃபீஸ் வேலையா எந்த ஊருக்குப்போனாலும் அங்கே ட்விட்டர் நண்பர்களை சந்திப்பது 
 தீமைகள் - உறவினர்களுக்கு அதிக நேரம் செலுத்துவதில்லை என குடும்பத்தார் குறை 



11. ஆரம்ப காலங்களில் உங்கள் பதிவை பிரபலபடுத்த உழைத்த அனுபவம்

அப்படி ஏதும் பெருசா உழைக்கலை.  சாதாரணமாத்தான் போஸ்ட் போடுவேன். இப்போதான் அதுக்காக மெனக்கெடறேன் 


12. உங்கள் ஜோக்கால் சிரிக்க வைக்க முடியாத நபர்

 தாலி கட்டிய என் சொந்த சம்சாரம் . படு சீரியஸ் பார்ட்டி 
படிக்கமாட்டங்களா தைரியமா சொல்லிட்டீங்க
13. கணக்கில் நீங்கள் புலியா? புளியா?

 பாடத்துல புலி  10, + 2 ல செண்ட்டம் , வீட்டில் சமையல் அறையில்  புளி

14. புதிய பதிவர்களுக்கு

 பழைய பதிவர்களை பார்த்து நல்லதை கத்துக்குங்க. உங்க தனித்தன்மையை விட்டுடாதீங்க . எல்லார் பிளஸ்ஸையும் ஃபாலோ பண்ணூங்க. யாருடைய மைன்சையும் ஃபாலோ பண்ணிடாதீங்க 


கீச்சர்களில் @senthilcp
`உங்களுடைய ஒத்துழைப்பிற்க்கு மிக்க நன்றி.....உங்களுடைய எண்ணங்கள் யாவும் வண்ணமடைய வாழ்த்துக்கள்...

தினபதிவு 
தினமும் உங்களை புதுப்பிங்கள்



Tamil Blog News

4 comments:

  1. சுவையான பேட்டி! ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!

    ReplyDelete
  3. சுவை அருமையான பேட்டி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

 

தினபதிவு திரட்டி Copyright © 2011 - |- Template created by O Pregador - |- Powered by Blogger Templates